செய்யாறு, செப். 15- செய்யாறு மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் 12.9.2026 அன்று மாலை ஆறுமணிக்கு படிகலிங்கம் மருந்தகத்தில் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாளை நன்றித் திருவிழாவாக கொண்டாட வேண்டிய அவசியத்தையும், தமிழர் தலைவர் அவர் களின் ஓய்வறியா உழைப்பி னையும், கழகப் பொறுப் பாளர்களும், தோழர்களும் ஆற்ற வேண்டிய கடமைகளையும் விளக்கியு ரையாற்றினார்.
பொதுக்குழு உறுப் பினர் என்.வி.கோவிந்தன், மாவட்டத் துணைத் தலைவர் அ.நாகராசன், மாவட்ட ப.க. தலைவர் வடமணபாக்கம் வி.வெங் கட்ராமன், இளைஞரணித் தலைவர் வெங்கடேசன், ஆசிரியர் முபாரக், மனோஜ்குமார், த.அனிஷ் ஆகியோர் விழா சிறக்க கருத்துரை வழங்கினார்கள்.
அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாளான செப் – 17அன்று புத்தாடையுடுத்தி, இனிப்பு வழங்கி, தந்தை பெரியார் சிலை படங்களுக்கு மாலை யணிவித்து மகிழ்வதென முடிவு செய்யப்பட்டது.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாள் மகிழ்வாக 27.9.2026 அன்று சமூநீதி நடை ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டது.
தந்தை பெரியார், அன்னை மணியம் மையார், தமிழர்தலைவர் ஆகியோரின் பேரன்பைப் பெற்ற செய்யாறு பா.அருணாச்சலம் அவர் களின் நூற்றாண்டு விழாவில் 6.11.2026 அன்று பங்கேற்க ஒப்புதல் வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள் கிறது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
