ஒட்டாவா, செப்.13- கனடா வில் இந்திய பெண் ஒருவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டி ருக்கிறார். அங்கு, வாடகைக்கு இருந்தவர், மாட்டுக்கறி சமைத்தி ருக்கிறார். இதை இந்திய பெண் தடுத்த நிலையில் தற்போது கனடா காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், மாட்டுக்கறி பிரச்சினை எல்லாம் எதுவும் கிடையாது என்று அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவின் சர்ரே பகுதியில் நில உரிமையாளரான ராஜ் திவானா, தனது வாடகைதாரர் தோட்டத்தில் மாட்டிறைச்சி பார்பிக்யூ கிரில் சமைத்ததை பார்த்து கோபமாயிருக்கிறார். சுவரில் கறை படிவதாக கூறி.. இதை சமைக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார்.
வாடகைதாரர் புகார்
இருந்தாலும் வாடகைக்கு இருந்தவர்.. நான் சமைத்தே தீருவேன் என்று பிடிவாதமாக இருந் திருக்கிறார். பொறுத்து பார்த்த ராஜ் திவானா, கிரில்லில் இருந்த உணவை மரக்கட்டையால் தட்டிவிட்டு, தனது இடத்தில் சமைக்கக் கூடாது என்று கூறி தாக்குதல் நடத்தி மிரட்டியிருக்கிறார். வாடகைக்கு இருந்தவர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். சமயலை தடுத்தது, கல் வீசி தன்னை தாக்கியது தொடர்பான காட்சிப் பதிவு ஆதாரத்தை சமர்ப் பித்திருக்கிறார்.
சமைத்தவர் மீது தாக்குதல்
இது மட்டும் கிடையாது.. வாடகை கொடுத்திருந்தாலும், வீட்டின் பூட்டுகளை மாற்றியதோடு, வீட்டின் முன் கதவையே முழுமையாக கழற்றி எடுத்து சென்றுவிட்டதாகவும் வாடகைக்கு இருந்தவர் குற்றம்சாட்டினார். மேலும் ஆட்களை அனுப்பி தன்னை மிரட்ட முயன்றதாகவும் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை தொடர்ந்து காவல்துறை விசாரணையில் இறங்கியது. மறுபுறம் ராஜ் திவானாவின் காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் பரவலாகியது.
காவல்துறை நடவடிக்கை
இதையடுத்து இன்று ராஜ் திவானா என்பவரை உள்ளூர் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த விவகாரம் மாட்டிறைச்சி சம்பந்தப்பட்டது கிடையாது என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதுவரை ராஜ் திவானா காவல்துறை விசா ரணை வளையத்தில் மட்டும்தான் இருக்கிறார். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அவருக்கான தண்டனை என்ன என்பது குறித்து தெரிய வரும்.
