தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து மசோதா தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.9- தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சென்னையை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த 27 மாவட்டங்களிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம் கடந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, இந்த உள்ளாட்சிகளின் நிர்வாகங்களை கவனிக்க தமிழ்நாடு அரசு தனி அலுவலர்களை நியமித்தது.

இந்த தனி அலுவலர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில், மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகும், இதேபோல் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று (8.9.2026) தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் என்.ஆனந்த் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி தவிர 28 மாவட்டங்களில் உள்ள, கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம், கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி முடிவடைந்தது. வார்டு எல்லை மறுவரையறை, இடஒதுக்கீடு பணிகள் நிறைவு பெறாததால், தேர்தல் நடத்தப்படவில்லை.

எனவே, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது வரை, மறுவரையறை பணிகள் முடியவில்லை. எனவே, தனி அலுவலர்களின் பதவி காலத்தை வரும் அக்டோபர் 19ஆம் தேதி வரையிலோ, தேர்தலுக்கு பின், உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கூட்டம் வரையிலோ நீட்டிக்க, ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *