நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது? எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 9- “நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது?” என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘நீட் தேர்வின் அச்சம் காரணமாக பல்லாவரத்தைச் சேர்ந்த சாய் அபினவ் என்கிற மாணவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி இருந்த நிலையில், மீண்டும் கோச்சிங் சென்டரில் இணைந்து நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் சாய் அபினவ், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

ஈடு செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டு நிற்கும் மாணவர் சாய் அபினவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது?.

குளறுபடிகளும், மோசடிகளும் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்வதற்காக திமுக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களை, இன்றைய ஆட்சியாளர்கள் இன்னும் வேகத்துடன் மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *