தாம்பரம் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகம்

தாம்பரம், செப். 8- 5.9.2026 அன்று மாலை 7 மணி அளவில் பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன் தலைமையில் நடைபெற்றது.

மேனாள் கழக அமைப்புச் செயலாளர் நெய்வேலி வெ.ஞான சேகரன் மற்றும் மாவட்டச் செயலா ளர் கோ.நாத்திகன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்தநாள் விழா மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து, கழகத் தோழர்கள் மற்றும் பகுத்தறிவாளர் அணியை சேர்ந்த தோழர்கள் கலந்துகொண்டு சிறப் பித்தனர்.

தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்தநாள் விழாவை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் வழிகாட்டுதலின்படி மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் செய்துவது என்று உறுதிமொழி ஏற்றனர் கூட்டம் மிகச் சிறப்பாக அமைந்தது.

தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்த நாள் விழாவை மிக கோலாகலமாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.

தந்தை பெரியாரின் பிறந்த நாளை ஒவ்வொரு கழக குடும்பமும் கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.

ஒவ்வொரு கழக உறுப்பினர்களின் அடையாள அட்டையாக விடுதலை சந்தாவை உறுப்பினர் அட்டையாக தீர்மானிக்கப்பட்டது.

தாம்பரம் மாவட்ட கழக சார்பாக புதிய விடுதலை சந்தாக்கள் சேர்ப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *