கழகக் களத்தில்…!

இணையவழி கையெழுத்து இயக்கம்

9.9.2026 புதன்கிழமை
வேலூர் மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

வேலூர்: மாலை 5 மணி *இடம்: புன்னகை மருத்துவமனை, வேலூர் *தலைமை: வி.இ.சிவக்குமார் (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: இ.தமிழ்தரணி (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: இர.அன்பரசன் (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) *நோக்கவுரை: வி.சடகோபன் (மாவட்டக் காப்பாளர்) *சிறப்புரை:
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள் விழா, தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குவது, இயக்க வளர்ச்சி *நன்றியுரை: உ.விஸ்வநாதன் (பொதுக்குழு உறுப்பினர்)

போடி நகர கழக
கலந்துரையாடல் கூட்டம்

போடி: மாலை 6 மணி *இடம்: போடி நகரத் தலைவர் ரகு பெரியார் லெனின் இல்லம்  தென்றல்நகர் * பொருள்: அறிவு ஆசான் தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள் விழா  நடத்துவது தொடர்பாக, தலைமைச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றல் * தோழர்கள் அனைவரும் வருகை தர வேண்டுகிறோம். * இவண்: நகரத் தலைவர் ரகு.பெரியார் லெனின், நகரச் செயலாளர் கோ. முருகானந்தன்.

11.9.2026 வெள்ளிக்கிழமை
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்
ஜாரி வாரி கணக்கெடுப்பை நீக்கிட
சூழ்ச்சி செய்யும் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்: காலை 10 மணி *இடம்: தலைமை அஞ்சல் நிலையம் எதிரில், இரயிலடி, தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத் தலைவர்) *தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), பா.நரேந்திரன் (மாவட்டத் துணைத் தலைவர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச்  செயலாளர்), மா.அழகிரிசாமி (பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவுத் தலைவர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்),
இரா.செந்தூர்பாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), நா.இராமகிருஷ்ணன் (பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநில செயலாளர்), பி.பெரியார்நேசன் (மாநில வீதி நாடகக் கலைக்குழு உறுப்பினர்) *நன்றியுரை: இரா.வீரக்குமார் (மாநகரச் செயலாளர்) *ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *