பல்லாவரம், செப். 08- நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்த இளைஞர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பல்லாவரம் கரிபி தெருவைச் சேர்ந்த பிரபாகரன் மகன் சாய் அபினோ (18). இவர் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை இருமுறை எழுதிய நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அண்ணா நகரில் நீட் தேர்வு பயிற்சி மய்யத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (7.9.2026) வீட்டில் உள்ள படுக்கையறையில் சாய் அபினோ தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்த பல்லாவரம் காவல்துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்புவதற் கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இது தொடர் பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல
மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் தனிமையில் இருக்காமல் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்களிடம் பேசுவது அவசியம்.
உடனடி உதவிக்கு மாநில தற்கொலை தடுப்பு உதவி மய்யம் 104 என்ற 24 மணி நேர எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மய்யத்தை 044-2464 0050 என்ற எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
