‘நீட்’ தேர்வு மற்றொரு உயிர் பலி!

இணையவழி கையெழுத்து இயக்கம்

பல்லாவரம், செப். 08- நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்த இளைஞர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பல்லாவரம் கரிபி தெருவைச் சேர்ந்த பிரபாகரன் மகன் சாய் அபினோ (18). இவர் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை இருமுறை எழுதிய நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அண்ணா நகரில் நீட் தேர்வு பயிற்சி மய்யத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (7.9.2026) வீட்டில் உள்ள படுக்கையறையில் சாய் அபினோ தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்த பல்லாவரம் காவல்துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்புவதற் கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இது தொடர் பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல

மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் தனிமையில் இருக்காமல் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்களிடம் பேசுவது அவசியம்.

உடனடி உதவிக்கு மாநில தற்கொலை தடுப்பு உதவி மய்யம் 104 என்ற 24 மணி நேர எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மய்யத்தை 044-2464 0050 என்ற எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *