சேதுராயன் குடிக்காட்டின் லட்சியப் பெரியார் பெருந்தொண்டர் தோழர் மா.இராஜப்பா மறைந்தாரே! நமது வீர வணக்கம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தஞ்சை மாவட்டம், உரத்தநாடு ஒன்றியம், சேதுராயன் குடிக்காடு பகுதியின் ஒப்பற்ற முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தோழர் மா.இராஜப்பா (வயது 89)  அவர்கள் நேற்று (6.9.2026) இரவு 9 மணியளவில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு பெரிதும் நாம் துயருற்றோம்.

கொள்கையில் மிக்க உறுதி, அனைத்துக் கழகத் தோழர்கள் மற்றும் பொது வாழ்க்கையில் அனைவரும் மதித்துப் பாராட்டும் பண்பாளர். அமைதியுடனும், அடக்கத்துடனும், கட்டுப்பாடு காத்தும் கடமையாற்றும் கருஞ்சட்டைகளில் அப்பகுதியில் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்த லட்சிய வீரர் அவர்!

தந்தை பெரியார்,  அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் மற்றும் நம்மிடத்திலும், கழகச் செயற்பாட்டாளர்களிடமும் மிகுந்த கொள்கைப் பாசத்துடன் நடந்தவர்!

அவரை இழந்து துன்பமடைந்துள்ள வாழ்விணையர் தனபாக்கியம், மகன்கள் இரா.சேகரன், இரா.ரமேஷ், இரா.சுரேஷ் ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இயக்கக் குடும்பத்தினருக்கும் நாம் ஆறுதல் கூறுவதுடன், அவருக்கு நமது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்  

 7.9.2026 

சென்னை   

குறிப்பு: குடும்பத்தினருக்குக் கழகத்
தலைவர் ஆறுதல் கூறினார். பெரியார் பெருந்தொண்டர்  மா.இராஜப்பாவின்  இறுதி ஊர்வலம் இன்று (07-09-2026) மாலை 4 மணி அளவில் சேதுராயன் குடிக்காட்டில் உள்ள இல்லத்திலிருந்து புறப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புக்கு:

இரா.சேகரன் (மூத்த மகன்) – 9786356942

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *