தனியாளாக ஆற்றை சுத்தப்படுத்திய கல்லூரி மாணவருக்கு பன்னாட்டு அங்கீகாரம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

போபால், செப்.7- மத்தியப் பிரதேச மாநிலம் பியோரா நகரைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர் சுரேந்திர சிங் சவுத்ரி (பிட்டு தபாஹி). இவர் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்திருந்த, பியோரா நகரில் ஓடும் அஜ்னார் ஆற்றை தனி ஆளாக சுத்தம் செய்ய தொடங்கினார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் நாள்தோறும் ஆற்றில் இறங்கி நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள், பாசிகள் மற்றும் ரசாயனக் கழிவுகளை அகற்றினார். தூய்மைப் பணிகளுக்கு முன்பும், பின்பும் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர, அது மிக வேகமாகப் பரவியது. மேலும் ஆற்றை சுத்தப்படுத்தும் பிட்டுவின் முயற்சிக்கு ஆதரவு பெருகியது.

இந்நிலையில், நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘ஓஷன் கிளீனப்’ என்கிற சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி போயன் ஸ்லாட், தங்களது அமைப்பில் இணைந்து பணியாற்ற பிட்டுவுக்கு இன்ஸ்டாகிராமில் அழைப்பு விடுத்துள்ளார்.

‘ஓஷன் கிளீனப்’ உலகின் பெருங் கடல்கள் மற்றும் ஆறுகளில் உள்ள நெகிழி மாசுபாட்டை அகற்றுவதற்காக, மேம்பட்ட தொழில் நுட்பங்களை உருவாக்கி விரிவு படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் லாப நோக்கமற்ற அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *