அறந்தாங்கி, செப். 7- 5.9.2026 அன்று மாலை அறந்தாங்கி நகர கழகத் தலைவர் வேல்சாமி இல்லத் தில் மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் க.மாரி முத்து தலைமை வகித்தார்.
தொடக்கத்தில் மாவட்ட கழகச் செயலாளர் செகதை இரா.குமார் 11.9.2026இல் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு ஆசிரியர் விடுத்த அறிக்கையினை வாசித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்தநாள் விழாவை நன்றித் திருவிழாக நடத்த வேண்டும் என்ற தமிழர் தலைவரின் அன்புக்கட்டளை நிறைவேற்றுவதை விளக்கி சிறப்புரையாற்றினார்.
பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநில அமைப்பாளர் கறம்பக்குடி க.முத்து, மாவட்ட ப.க தலைவர் க.வீரையா, பொதுக்குழு உறுப்பினர்கள்வே.அமுதா, நெய்வத் தளி த.சவுந்தர்ராசன், அறந்தாங்கி நகரச் செயலாளர் வழக்குரைஞர் இரா.குமார், திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் க.முருகேசன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், உ ரந்தை க.கபிலன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
தந்தை பெரியார் பிறந்தநாள் மகிழ்வாக அடையாறு ஆனந்த பவனில் 100 இனிப்பு பெட்டி வாங்கி நண்பர்களுக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஜாதிவாரி கணக்கெடுக்காமல் சூழ்ச்சி செய்வதைக் கண்டித்து 11.9.2026 அன்று கறம்பக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மாணிக்கப்பட்டது. அறந்தாங்கி நகரத் தலைவர் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
