மறுப்பார் – எவர்?
கடவுள் மதத் தர்மங்களின் பேரால் ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, மானக்கேடு, பண்புக் கேடுகள் எப்படிப் புகுத்தப்பட்டனவோ அப்படியே அவ்வளவும் (காந்தி காலத்தில்) அரசியலின் பேரால் படித்த பாமர மக்களிடையில் புகுத்தப்பட்டு விட்டன – இல்லையா? இவை நாட்டின் சமுதாயத்தையே பாழ்படுத்தி விட்டதுடன் அயோக்கியனாக – நாணயக்கேடனாக ஆகாமல் எவனும், எப்படிப்பட்ட செல்வவானும், யோக்கியனும், துறவியும் கூட வாழ முடியாத நிலையை உண்டாக்கி விட்டது என்பதை மறுப்பார் உண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
