குமரி மாவட்ட கழகம் சார்பில் சமூகநீதிப் பிரச்சாரம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாகர்கோயில், செப். 4- தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஆகியோர் சமூக நீதிக்கு ஆற்றிய தொண்டுகள், சமூக நீதி பிரச்சாரங்கள் திராவிடர் கழகத்தின் முயற்சியால் கிடைத்த இட ஒதுக்கீட்டு உரிமைகள், சமூக நீதி உரிமைகள், இப்போது ஒன்றிய பாஜக அரசினால் பறிக்கப்படும் சமூக நீதி இந்த செய்திகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் நூல்கள் மற்றும் துண்டறிக்கைகள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.

குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகர் மணிக்கூண்டு சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு போன்ற பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத் திற்கு மாவட்டத் தலைவர் மா.மு.சுப் பிரமணியம் தலைமை தாங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையை தொடங்கி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் ச. நல்ல பெருமாள், துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் திராவிடர் கழக மாநகர் தலைவர் ச. ச. கருணா நிதி, தோவாளை ஒன்றிய தலைவர் ஞா. பிரான்சிஸ், கழகத் தோழர்கள் பாறைக்காவிளை மு. பால்மணி, மு. குமரிச் செல்வன் மற்றும் பலர் பங்கேற்றனர். கழகத் தோழர்கள் பொது மக்களுக்கு வழங்கிய நூல்கள் துண்டறிக்கையினை மக்கள் ஆர்வமுடன் கருத்தூன்றி படித்தனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *