‘எச்டி ஹூண்டாய்’ கப்பல் கட்டும் திட்டத்தை கைப்பற்ற ஆந்திரா முயற்சி மேனாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை. செப். 4-  “தூத்துக்குடியில் அமையவுள்ள ‘எச்டி ஹூண்டாய்’ கப்பல் கட்டும் தளம் திட்டத்தை கைப்பற்ற ஆந்திரா அரசு தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ளவில்லை” என மேனாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திமுக ஆட்சிக் காலத்தில் மிகுந்த முயற்சியுடன் உறுதி செய்யப்பட்ட 4 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பிலான எச்டி ஹூண்டாய் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தைக் கைப்பற்ற, ஆந்திர அரசு இப்போது தீவிர முயற்சி செய்து வருகிறது. 2.5 மில்லியன் ஜி.டி திறன் மற்றும் 15 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்புகள் என்ற நிலைக்கு இத்திட்டம் முன்னேறியுள்ளது.

தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை முடிவடைந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பில் உள்ளது. மேலும் தேசிய கப்பல் கட்டும் மிஷன், இத்திட்டத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் முன்மொழியப்பட்ட அய்ந்து கப்பல் கட்டும் மய்யங்களில் தூத்துக்குடியே மிகவும் முன்னேறியது என்று ஒன்றிய அரசே கூறுகிறது.

ஆனாலும் இத்திட்டத்தை ஆந்திரா கொண்டு செல்லும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் தென் கொரியா சென்று காக்கினாடா மற்றும் ஆந்திராவை முன்வைத்துப் இத் திட்டத்தை கொண்டு செல்வது குறித்து பேசியுள்ளார். ‘எச்டி ஹூண்டாய்’ கப்பல் கட்டும் தளம் திட்டத்துக்கு கூடுதல் சலுகைகளை வழங்குவதாக ஆந்திர அரசு கூறுகிறது.

நல்வாய்ப்பாக ஏற்கெனவே தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்த முதலீட்டாளரைப் பறிக்க நடக்கும் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு அதிகாரிகளே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டிற்காக பெற்ற முதலீட்டைப் பாதுகாக்க டில்லியே விழிப்புடன் இருக்கும்போது, இங் குள்ள தவெக அரசு நிச்சயம் வேகத்தை காட்ட வேண்டும்.

எச்டி ஹூண்டாயை தமிழ்நட்டிற்க்குக் கொண்டுவர திமுக மிக மிகக் கடுமையாக உழைத்தது. யாரோ ஒருவர் அதைப் பிடுங்கப் பார்க்கும்போது தற்போதைய அரசு தூங்கி வழியக் கூடாது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் புத்தி கூர்மையையும், அமைச்சர் நாரா லோகேஷின் துரிதமான வேலையையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர்கள் சலிப்பின்றி உழைப்பவர்கள், டெல்லிக்கும் மிக நெருக்கமானவர்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *