சட்டக் கல்லூரி மாணவர்களின் நடத்தையைக் கட்டுப்படுத்த இந்திய பார் கவுன்சிலுக்கு அதிகாரமில்லை: உச்ச நீதிமன்றம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, செப். 04- அய்தராபாத் தேசிய சட்டப் பல்கலைக்கழ கத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், டில்லி யில் உள்ள ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறை நடத்திய தாக்கு தலுக்கு எதிரான மனுவை தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வு அவசரமாக விசாரிக்க மறுத்ததாகக் கூறி, 2026ஆம் ஆண்டு தேர்ச்சி பெறும் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தலைமை நீதிபதிக்கு எதிர்ப்பு தெரி வித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினர்.

இதற்குப் பதிலடியாக, அய்தராபாத் தேசிய சட்டப்பல்கலைக் கழகத் தின் 2026ஆம் ஆண்டு பிரிவு மாணவர்களை வழக்கறிஞர்களாகப் பதிவு செய்யத் தடை விதிக்கப் படுவதாக இந்திய பார் கவுன்சில் அறிவித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “1961ஆம் ஆண்டின் வழக்கறிஞர்கள் சட்டத்தின் கீழ் பார் கவுன்சிலுக்கு, சட்டக் கல்வி பயிலும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வழங்கப்படவில்லை. ஒரு மாணவர் சட்டப் படிப்பை முடித்து, அதிகாரப்பூர்வமாக வழக்குரைஞராகப் பதிவு செய்த பின்னரே, பார் கவுன்சிலின் கட்டுப்பாட் டின் கீழ் வருகிறார்.

மாணவர்கள் தரப்பில் தவறு இருந்தாலும் அவர்களுக்குப் போராட உரிமை உண்டு. எனவே, இந்த விவகாரத்தில் தலையிட இந்திய பார் கவுன்சிலுக்கு எந்த உரிமையும் இல்லை” என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்திய பார் கவுன்சில் தனது சுற்றறிக்கையை ஏற்கனவே திரும்பப் பெற்று விட்டதால், இந்த விவகாரத்தை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *