இந்நாள் – அந்நாள்

இணையவழி கையெழுத்து இயக்கம்

‘செயற்கை நுண்ணறிவின் தந்தை’
ஜான் மெக்கார்த்தி பிறந்த நாள் இன்று (04.09.1927)

 

செயற்கை நுண்ணறிவு இன்று உலகின் மூலைமுடுக் கெல்லாம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால், கணினிகள் வெறும் கணக்கீடுகளுக்கு மட் டுமே பயன்பட்ட 1950-களிலேயே, “இயந்திரங்களால் மனிதனைப் போல சிந்திக்க முடியுமா?” என்ற புரட்சிகரக் கேள்வியைக் கேட்டு, அதற்கான விதையைப் போட்டவர் தான் அமெரிக்கக் கணினி விஞ்ஞானி ஜான் மெக்கார்த்தி.

1956-ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க ‘டார்ட்மவுத் மாநாட்டை’ ஏற்பாடு செய்தவர் ஜான் மெக்கார்த்தி. இந்த மாநாட்டில் தான் முதன்முதலாக “செயற்கை நுண்ணறிவு” (Artificial Intelligence) என்ற வரலாற்றுச் சொல் அவராலும் அவரது சக ஆய்வாளர்களாலும் முறைப்படி உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்தை உருவாக்க அவர் வடிவமைத்த ‘LISP’ என்னும் கணினி நிரலாக்க மொழி (1958), உலகின் இரண்டாவது பழைமையான உயர்நிலை மொழியாகும். இதுவே பல தசாப்தங்களாக ஏஅய் ஆய்வுகளுக்கான முதன்மை மொழியாக விளங்கியது.

நேரப் பங்கீடு  ஒரே நேரத்தில் பல பயனீட்டாளர்கள் ஒரே கணினியைப் பயன்படுத்தும் டைம் சேரிங் ‘Time-Sharing’ முறையை அறிமுகப்படுத்தினார். இதுவே இன்றைய மேகக்கணிமை  தொழில்நுட்பத்தின் அடித் தளமாகும்.

மனிதர்களைப் போல தர்க்கரீதியாகவும், கணித நெறிமுறைகளின் அடிப்படையிலும் கணினிகள் முடிவெடுக்க வேண்டும் என்ற ஃபார்மல் லாஜிக் ‘Formal Logic’ கோட்பாட்டை AI துறையில் புகுத்தினார்.

கணினி அறிவியல் துறையின் உயரிய விருதான ‘டியூரிங் விருது’  – 1971, அமெரிக்க அதிபரின் தேசிய அறிவியல் பதக்கம், மற்றும் ஃபிராங்க்ளின் பதக்கம் போன்ற எண்ணற்ற கவுரவங்களை இவர் பெற்றுள்ளார்.

இன்று நாம் பயன்படுத்தும் சாட்பாட்கள் , சுயமாக இயங்கும் வாகனங்கள், மற்றும் அதிநவீன ஏஅய் அமைப்புகள் அனைத்துக்கும் தொடக்கப்புள்ளியாக இருந்தவர் ஜான் மெக்கார்த்தி. கணினிகளுக்குச் சிந்தனைத் திறனைக் கற்பிக்கத் துணிந்த அந்த மாபெரும் மேதையின் பிறந்தநாள் இன்று (04.09.1927)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *