தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை – சட்டமன்றத்தில் இரண்டு மணி நேரம் நீடித்த விவாதம்! தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீரழிவைப் பட்டியலிட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 04- தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து 116 நாட்களில் சட்டம்-ஒழுங்கு எந்தளவுக்கு சீரழிந்துள் ளது. இன்றைக்கு சட்டம் இருக்கிறது. ஆனால், ஒழுங்கு இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் ஆணித்தரமான விவாதங்களை எடுத்து வைத்தார். இதை கேட்டுக் கொண்டிருந்த முததலமைச்சர் ஜோசப் விஜய் பாதியில் எழுந்து, குற்றச்சாட்டுகளுக்கு 3 நாளுக்கு பிறகு (7.9.2026) பதில் அளிப்பதாக கூறி விட்டு வெளியேறினார். இதனால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டப் பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் முதல் ஆளாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

116 நாட்களில்,
10 ஆணவக் கொலைகள்….

அவர் பேசியதாவது: தவெகவின் 116 நாள் ஆட்சியில் மக்களுக்கு, குறிப்பாக, பெண்களுக்கு மிகப்பெரிய துயரமாக மாறிவிட்டது. நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள். கறிக்கடையில்கூட இந்த அளவுக்கு வெட்ட மாட்டார்கள். அந்த அளவுக்கு தமிழ் நாட்டில் ஒவ்வொரு நாளும் வெட்டுக் குத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், கோவை மாவட்டத்தில் 9 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 116 நாட்களில், 10 ஆணவக் கொலைகள் நடந்திருக்கின்றன. ஆளுங்கட்சி யினர் நாள்தோறும் குற்றச் செயல் களில் ஈடுபடுவது தொடர்கதை ஆகிக் கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு தூத்துக்குடி மாவட்டத்தில், ஒரு சட்ட மன்ற உறுப்பினர் பெயரைச் சொல்லி ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது, இந்த அரசு இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அமைச்சர் ஆனந்த்: குற்றச் செயல்களில் ஈடுபட்டால் தவெக உள்பட எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும் பாகுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

பேரவைத் தலைவர்: எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது சில குற்றச்சாட்டுகளை கூறி பேசினார். இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்பது இல்லை. முதலமைச்சர் சார்பில் அமைச்சர்கள் பேச அனுமதி உண்டு.

உதயநிதி ஸ்டாலின்: நான் பேசும்போது குறுக்கீடு இருக்கக்கூடாது என்று நீங்கள் விரும்புவதாக சொன் னீர்கள். ஆனால் இவர்கள் குறுக்கீடு செய்கிறார்கள். நான் இன்று உரையாற் றுவது, காவல்துறை மீதான விவாதத்தில். நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை விவாதத்தில் பங்கேற்கவில்லை.

அமைச்சர் செங்கோட்டையன்: தவெக சட்டமன்ற உறுப்பினர்மீது குற்றச்சாட்டு கூறுகிறீர்கள். இதற்கு எந்த அமைச்சர் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம் அமைச்சரவை என்பது கூட்டு பொறுப்பு.

பாலியல் வன்கொடுமை செயலில் ஆளுங்கட்சியினர்

உதயநிதி ஸ்டாலின்: நான் பேச்சை ஆரம்பிக்கும்போதே சொன்னேன். முதலமைச்சர் பேச்சை கேட்டுவிட்டு திங்கட்கிழமை (7.9.2026) அவர் பதிலுரை சொல்லும்போது சொல்லட்டும் என்றுதான் சொன்னேன். இப்போதுதான் பட்டியலையே ஆரம்பிக்கிறேன். இன்னும் நிறைய இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த இன்னொரு பெண் உறுப்பினர், ஆளுங்கட்சியின் நிர்வாகியின் ஓட்டுநர் ரூஸ்வெல்டு என இரண்டு பேர் மேல் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருக்கிறார்கள். அந்த வழக்கிலும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னையில், ஆளுங்கட்சியின் ஆலந்தூர் வடக்குப் பகுதி செயலாளர் அவர் பெயர் வேம்புலி. ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

அவரை கட்சியைவிட்டு நீக்குவதாக செய்திகள் வந்தன. ஆனால், கைதான சில நாட்களிலேயே வெளியே வந்து, ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற ஓர் அரசு நிகழ்ச்சியிலேயே அவரும் பங்கேற்றுள்ளார். ஆளுங்கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மோகன். ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தார். 4 பிரிவுகளில் எப்அய்ஆர் பதிவு செய்தும், இது வரை விஜய் மோகனை கைது செய்ய வில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை காசிமேட்டில், ஆளுங்கட்சியின் ஆர்.கே.நகர், 43வது வார்டு பொறுப்பாளராக இருந்த `பாம்பு’ தினேஷ் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை

சேலத்தில், பொள்ளாச்சி நிகழ்வுக்கு இணையாக 50க்கும் அதிகமான பெண்களை ஆபாச படங்கள் எடுத்து மிரட்டியதாக ஆளுங்கட்சிப் பிரமுகர் மணிகண்டன் மேல் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். திருவள்ளுர் தெற்கு மாவட்ட ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் என்கிற `குட்டி’ ஆளுங்கட்சியின் ஒரு பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரும் செய்திகளில் வந்திருக்கின்றன. சிவகங்கையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆளுங்கட்சி நிர்வாகி மகாராஜா, ராபின், ஹரீஷ், கரூர், குளித்தலையில் திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆளுங்கட்சியின் ஒன்றிய செயலாளர் பெயர் ரமேஷ்.

மாணவிக்கு பாலியல் தொல்லை

மதுரை கீழமாத்தூர் பகுதியில் 10ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த ஆளுங்கட்சி நிர்வாகி கண்ணன். இப்படி இந்த 116 நாட்களில் ஆளுங்கட்சியினர் பெண்களுக்கு செய்த அட்ராசிட்டுகளுக்கு ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது. எம்.ஜி.ஆர் நகர் வெங்கடேசன், தென்காசி மாவட்டத்தில் கதிரேசன், தூத்துக்குடி அருணாச்சலம், மதுரையில் பூசாரி பரமசிவம் ஆகியோர் காவல் நிலையங்களில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் வேல்முருகன் என்கிற மாரியப்பன், காவல்துறை தாக்கிய அவமானத்தில் தீக்குளித்து இறந்துபோய்விட்டார்.

சிறை மரணங்கள் அதிகரிப்பு…

அதேபோல காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய பிறகு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட கன்னியாகுமரி சபரிவர்மன், சேலையூர் பாலாஜி, மதுரை சிறையில் அன்வர்தீன் உள்ளிட்டோர் மரணமடைந்திருக்கிறார்கள். இந்த நிகழ்வுகளில் இதுவரைக்கும் இந்த அரசு, முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று கேட்க விரும்புகிறோம். ஒட்டு மொத்தமாக இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிக மிக மோசமான ஒரு நிலையை அடைந்திருக்கிறது. முதலமைச்சருடைய நேரடி கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய உள்துறையும், உளவுத்துறையும் மொத்தமாக செயலிழந்து போய்விட்டதா என்று எங்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. ஏன் கேட்கிறேன் என்றால், குற்ற நிகழ்வகளை தடுக்க வேண்டிய காவல்துறையினர்,

பா.ஜ. தலைவர்கள்மீது
வழக்குப் பதிவு இல்லை?

அரசை விமர்சனம் செய்கின்ற எதிர்க்கட்சியினர், குறிப்பாக ஜென்––-சி இளைஞர்கள், அவர்களோடு கூட்டணி வைத்திருக்கக் கூடிய கூட்டணி கட்சியினர், பத்திரிகையாளர்கள் எல்லோரையும் கைது செய்வதில் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறார்கள். ஆனால், முதலமைச்சரை வெளிப்படையாக விமர்சித்து பேசுகின்ற பாஜ தலைவர்கள் மீது இதுவரைக்கும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அவர் மீது ஏன் ஒரு புகாரை கூட இதுவரைக்கும் கொடுக்கவில்லை? `எங்களுக்கு வந்தால் ரத்தம், அவர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா?’ என்று கேட்கிறோம்.

இப்படி பாஜ அடித்தாலும், வலித்தாலும் வெளியே சொல்லக் கூடாது என்கின்ற ஆளுங்கட்சியின் இந்த அரசியல் வியூகத்தை இதுவரைக்கும் நாங்கள் யாரும் கேள்விப்பட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை என்றார். இந்த விவாதம் நீண்டுகொண்டே சென்றபோது ஒரு கட்டத்தில் எழுந்த முதலமைச்சர் விஜய், “உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை (7.9.2026) கொடுக்கிறேன். நான் இங்கே இல்லையென்றாலும் உங்களின் கேள்விகள் எனக்கு வந்துவிடும். நான் பேசும்போது யாரும் எழுந்து ஓடிவிடக் கூடாது’’ என்று சொல்லிவிட்டு அவையை விட்டு வெளியேறினார்.

உதயநிதி ஸ்டாலின்: கடைசியாக யார் ஓடினார் என்பது எல்லாருமே பார்த்தோம். எங்களை ஓடி விடாதீர்கள் என்று சொல்லிவிட்டு அவர் ஓடிவிட்டார் என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *