வடலூர், செப்.3- வடலூர் நகர கழகத்தின் சார்பில் 1.9.2026 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை தந்தை பெரியார் 148 ஆவது பிறந்தநாள் விழா மாவட்ட கழகத் தலைவர் சொ. தண்டபாணி தலைமையில் ஜெயப்பிரியா கெஸ்ட் ஹவுஸ் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது.
நகர கழகத்.தலைவர் புலவர் ராவணன் வரவேற்புரை ஆற்றினார். கழகக் காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், கடலூர் மாநகரத் தலைவர் தென் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் கோ.புத்தன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம், மாவட்ட துணை தலைவர் மணிவேல், மாவட்ட துணைச் செயலாளர் பஞ்சமூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் உதயசங்கர், செயலாளர் டிஜிட்டல் ராமநாதன், மாவட்ட மகளிரணித் தலைவர் முனியம்மாள், கழக மகளிர் அணி ரமா பிரபா ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டிமன்றத்தை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.
தந்தை பெரியார் பெரிதும் போராடியது ஜாதி ஒழிப்புக்கா? மூடநம்பிக்கை ஒழிப்புக்கா? எனும் தலைப்பில் ஆன பட்டிமன்றம், மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலன் நடுவராக இருக்க, ‘ஜாதி ஒழிப்புக்கே’ அணியில் கவிஞர் க.எழில் ஏந்தி, கவிதாயினி, வெற்றிச்செல்வி ஆகியோரும், ‘மூடநம்பிக்கை ஒழிப்புக்கே’ அணியில் பேராசிரியர் ஜானகிராஜா, ராணி, ராஜதுரை ஆகியோர் வாதிட்டனர்.
தந்தை பெரியார் பெரிதும் போராடியது ஜாதி ஒழிப்புக்கே எனும் தீர்ப்பினை நடுவர் இறுதியாக வழங்கினார்.
நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றியும், பங்கு பணியாற்றியும் சிறப்பித்தவர்கள்: கடலூர் ராஜதுரை, வடக்குத்து தீபக், ஒன்றியச் செயலாளர் இரு ராஜேந்திரன், மகளிரணித் தோழியர்கள் கலைச்செல்வி, திராவிட மணி சாந்தகுமாரி, குணசுந்தரி, சத்தியவதி, சுமலதா, மாவட்ட இளைஞரணித் தலைவர் உதயசங்கர், செயலாளர் டிஜிட்டல் ராமநாதன், ஒன்றியத் தலைவர் செந்தில்வேல், வடலூர் நகரச் செயலாளர் குணசேகரன், அமைப்பாளர் முருகன், இடி முழக்கம் இந்திரஜித், ஒன்றிய செயலாளர் கனகராஜ், மறுவாய் திருநாவுக்கரசு, செயலாளர் தங்க.பாஸ்கர், மறுவாய் பாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் சக்கரவர்த்தி, சேப்ளாநத்தம் வரதராசன், கஞ்சமலை, ராஜேந்திரன், இளங்கோ, துணைப் பேராசிரியர் கோபிநாத், ஆபத்தாரணபுரம் விசுவநாதன், குப்புசாமி, பெரியார் தாசன், சிதம்பரம் கழக மாவட்டச் செயலாளர் சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செங்குட்டுவன், புஷ்ப சவுரிராஜன், டெயிலர் செல்வம், குறிஞ்சிப்பாடி அறிவுமணி, வடலூர் வசந்த், திமுக செல்வராசு, ராயர் சிவன், ஆயிக்குப்பம் வள்ளல் குமார், நெய்வேலி நகரத் தலைவர் இசக்கிமுத்து, நெய்வேலி பாவேந்தர் விரும்பி, தமிழ்மணி, ஞானசங்கர், ஜெயக்குமார், ரவி, சேகர், கண்ணன், அப்பியம் பேட்டை வேலு, வடக்குத்து தர்மலிங்கம், நடையாளர் கழகத் தலைவர் வள்ளி மணாளன், அப்பியம் பேட்டை சத்தியவதி, குணசுந்தரி, வீர சுந்தரம், திருநாவுக்கரசு மருவாய், ஆகியோர் ஆவர். நிறைவாக இரா.குணசேகரன் நன்றி கூறினார்.
