ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் எச்சரிக்கை!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 31- ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என ஏற்காவிட்டால் தவெக அமைச் சரவையில் இருந்து விலகுவோம் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கருத்தை தெரி வித்துள்ளார்.

‘வரும் 2029ஆம் ஆண்டு மக்க ளவை தேர்தலில், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கருநாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், 40 தொகுதிகளில், த.வெ.க., தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்.

‘தெலங்கானாவில் கவிதா, ஆந்திராவில் ஜெகன்மோகன் உபி.,யில் அகிலேஷ் தலைமையிலான அணிகளுக்கு, 50 தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இப்படி மொத்தம், 130 நாடாளுமன்ற உறுப் பினர்கள் அணியை உருவாக்கி, அதற்கு விஜய் தலைமை வகிப்பார். காங்கிரஸ் ஆதரவுடன் விஜய் பிரதமராவார் என முதல்-அமைச்சர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் கணித்துள்ளார்.

அவரது கணிப்பு தகவல்களை, த.வெ.க.,வுக்கு ஆதரவாக செயல் படுகிற, ‘வெற்றி டிவி’ நிர்வாக இயக்குநர் சிங்காரவேலன் வெளி யிட்டுள்ளார். தமிழ்நாடு அரசியலில் இருந்து, தேசிய அரசியலுக்கு விஜய்யின் பயணம் விரிவடையுமா என்ற விவாதத்தை, ஜோதிடரின் கணிப்பு உருவாக்கி, காங்கிரசாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இன்றைய முதலமைச்சர் விஜய், நாளைய பிரதமர்’ என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள், துாத்துக்குடி மாவட்ட த.வெ.க.,வினரால் ஒட்டப் பட்டு உள்ளன. அதற்கு பதிலடியாக, ‘ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என, சமூக வலைதளங்களில் காங்கிரசார் தங்களது எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், குமரியில் காங் கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார்,

“2029 நாடாளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் வேட்பாளர் எங்களு டைய தலைவர் ராகுல் காந்தி தான். ஒருவேளை தமிழக வெற்றிக்கழகம் அதற்கு உடன் படவில்லை என்றால், தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களும் எங்கள் பொறுப்புகளை துறப்போம் என்றார்.

ராகுல் காந்தி பிரதமர் வேட் பாளர் என ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவையில் இருந்து விலகு வோம் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பேசி உள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *