முஸ்லிம் மாணவிகளின் கல்வி கட்டணத்தை அரசு வழங்கும் அமைச்சர் ஷாஜஹான் அறிவிப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 28- சட்டப் பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.2,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் இளநிலை படிப்புகளில் சேரும் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்விக் கட்டணத் தொகையை அரசே வழங்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறுபான்மையின மக்கள் அதிகமாக வசிக்கும் 10 மாவட்டங் களில் ரூ.4.45 கோடியில் மாவட்ட சிறுபான்மை யினர் நல அலுவலர் பணியிடங்கள் புதி தாகத் தோற்றுவிக்கப்படும்.

முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களின் சொத்துகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் கட்டடங்கள் கட்ட வட்டியில்லாக் கடன் வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.100 கோடி சுழல் நிதி ஒதுக்கப்படும். மேலும், தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு வழங்கப்படும் மானியம் ரூ.5 கோடியாக உயர்த்தப்படுவதுடன், அதன் தலைமை அலுவலகத்துக்கு ரூ.40 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *