இந்த மாதம் ஓய்வூதியம் தாமதமாக வாய்ப்பு! தமிழ்நாடு அரசு விளக்கம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 14- சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெற்று வருபவர்களுக்கு நடப்பு மாதத்துக்கான தொகை வரவு வைக்கப்படுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒன்றிய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் தேசிய முதியோர் ஓய்வூதியத்திட்டம், தேசிய கைம்பெண் ஓய்வூதியத் திட்டம் மற்றும் தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றின் கீழ் சுமார் 19 லட்சத்து 20,858 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

இந்த திட்டங்களின் கீழ் ஆகஸ்ட் மாதத்துக்கான ஓய்வூதியத் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் பயனாளிகளுக்கான ஓய்வூதியப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, ஒன்றிய அரசின் பங்களிப்புத் தொகைக்கான ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், செப்.11 முதல் 14ஆம் தேதி வரை ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை என்பதால், ஓய்வூதியப் பட்டியலுக்கு ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தங்கள் ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *