அமெரிக்காவில் பதின்ம வயதினர் இன்ஸ்டா, முகநூல் பார்க்க புதிய கட்டுப்பாடு

இணையவழி கையெழுத்து இயக்கம்

வாசிங்டன், ஆக. 28- இன்ஸ்டா கிராம், முகநூல் பயன்படுத்தும் பதின்ம வயதினருக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, அமெரிக்காவில் 29 மாகாணங்களுடன் ஏற்பட்ட 18 பில்லியன் டாலர் (ரூ. 1.71 லட்சம் கோடி) மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இழப்பீட்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 13-18 வயதுக்கு உட்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த செயலிகளில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவர மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

நீதிமன்ற ஒப்புதலுக்குப் பிறகு அமலுக்கு வரவுள்ள இந்த விதிமுறைகள் அடுத்த 10 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும். இதன்படி, முகநூல், இன்ஸ்டா ஆகிய 2 செயலி களையும் சேர்த்து சிறுவர்கள் ஒரு நாளுக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *