நேபாள வெள்ளம் : உயிரிழப்பு 470 ஆக அதிகரிப்பு! காணாமல் போனோரை மீட்கும் பணி தீவிரம்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

காத்மாண்டு, ஆக.28 நேபாள வெள்ளத்தில் சிக்கி  உயிரிழந்தோர் எண்ணிக்கை 470-ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா்கள் 288 போ் உள்பட வெள்ளத்தில் காணாமல் போன 826 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள தேசிய பேரிடா் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

திபெத்தின் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், போடே கோஷி நதி வழியாக நேபாளத்தின் மத்திய மாவட்டங்களுக்குள் 26.8.2026 அன்று புகுந்து பேரழிவை விளைவித்தது.

மலைப் பகுதியில் இருந்து சகதி, பாறைகளுடன் இரு கரைகளையும் சூழ்ந்தபடி பல அடி உயரத்துக்கு சீறிப்பாய்ந்த வெள்ளத்தில், ஏராளமான வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், 10-க்கும் மேற்பட்ட நீா்மின் நிலையங்கள், பிற உள்கட்டமைப்புகள் கூண்டோடு அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தின் கோர தாண்டவத்தில் பல கிராமங்கள் உருக்குலைந்தன.

திபெத்தையொட்டிய ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி நதியில் முதலில் பெருக்கெடுத்த வெள்ளம், பின்னா் திரிசூலி, நாராயணி நதிகளிலும் பாய்ந்ததால், நுவாகோட், தாடிங் உள்பட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தன. பலத்த உயிர்ச் சேதம் மற்றும் பொருட்சேதத்துடன், நேபாளம் கடந்த பல்லாண்டுகளில் காணாத மிக மோசமான இயற்கைப் பேரிடராக இது மாறியுள்ளது.

தோண்ட தோண்ட உடல்கள்

வெள்ளத்தால் புரட்டிபோடப்பட்ட ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட மாவட்டங்களில் நேபாள ராணுவம் மற்றும் பிற முகமையினா் இரண்டாவது நாளாக 27.8.2026 அன்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். சகதி குவியலிலிருந்து தோண்ட தோண்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தோர்எண்ணிக்கை 359-ஆக அதிகரித்துள்ளது.

வனப் பகுதி சுற்றுலாவுக்கு பெயா் பெற்ற சிட்வான் மாவட்டத்தில் அதிகபட்சமாக 132 உடல்கள் மீட்கப் பட்டதாக காவல் துறை செய்தித் தொடா்பாளா் அபி நாராயண் காஃப்ளே தெரிவித்தார்.

30-க்கும் அதிக நாடுகளின் பயணிகள்

இந்தியா்கள் 288 போ் உள்பட 826 போ் காணாமல் போயுள்ளனா். இவா்களில் 590 போ் சுற்றுலாப் பயணிகள் ஆவா்; 476 போ் வெளிநாட்டவா் என்று நேபாள தேசிய பேரிடா் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

சீனா, அமெரிக்கா, மலேசியா, உக்ரைன், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூா், ரஷ்யா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் பயணிகள் காணாமல் போயுள்ளனா். நேபாள ராணுவத்தினா் 44 போ், காவல் துறையினா் 28 போ், ஆயுதக் காவல் படையினா் 13 பேரும் காணாமல் போயுள்ளனா்.

இந்தியா்களில் பெரும்பாலோனா், திபெத்தில் உள்ள கைலாஷ் மான சரோவா், நேபாளத்தின் பாகமதி மாகாணத்தில் உள்ள கோசைன்குண்டா புனித ஏரிகளுக்கு ஆன்மிக பயணம் சென்றவா்களாவா்.

80-க்கும் மேற்பட்ட பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதாலும், சாலைகள் கடுமையாகச் சேதமடைந் துள்ளதாலும் பல இடங்களுக்கு மீட்புக் குழுக்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மீட்புப் பணிகள் சவாலாக மாறியுள்ளன. உள்ளூா் மக்களின் உதவியுடன் சாலைகளை மறுசீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காணாமல் போனவா்களைக் கண்டறிய நதிக் கரைகள் மற்றும் நீரோட்டப் பகுதிகளில் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்டோர்மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *