பெரியாரின் செயலாளராக இருந்த க.ராசாராம் அவர்களின் நூற்றாண்டு விழாவில், கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒளிப்படக் கண்காட்சியைத் திறந்துவைத்து வாழ்த்துரை வழங்கினார்!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 27 தந்தை பெரியாரின் செயலாளராக இருந்தவரும், மேனாள் அமைச்சருமான க.ராசாராம் அவர்களின் நூற்றாண்டு விழாவில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ஒளிப் படக்கண்காட்சியைத் திறந்து வைத்து அவரது ஆளுமையைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

சென்னை கலைவாணர் அரங்கில், நேற்று (26.8.2026) மாலை 5 மணிக்கு, க.ராசாராம் அவர்களின் நூற்றாண்டு விழா,  வி.அய்.டி.வேந்தர் முனைவர் கோ.விஸ்வநாதன் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.மனோகரன் வரவேற்று உரையாற்றினார். ஆரூர் சுந்தரராமன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள்  அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே, மேனாள் ஒன்றிய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், எஸ்.திருநாவுக்கரசர், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், நல்லி குப்புசாமி, தி.மு.க. மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்  ஆர்.எஸ்.பாரதி, இலங்கைத் தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் மகன் டாக்டர் பகீரதன், நீதியரசர் ஜெகதீசன், எழுத்தாளர் ராணி மைந்தன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், மருத்துவர் காந்தராஜ், மேனாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரை யாற்றினர்.

“க.ராசாராம்: அரசியல் – சமுக – பேராளுமை!” –  நூற்றாண்டு மலர் வெளியீடு!

நிகழ்வின் தொடக்கமாக  கலைவாணர் அரங்கத்தின் மற்றொரு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த க.ராசாராம் அவர்களின் ஒளிப் படக் கண்காட்சியை, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். பின்னர், வெளி அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டி ருந்த படக்காட்சி மேடையில் பொதுமக்களுக்காக திரையிட்டுக் காட்டப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களுக்கு வி.அய்.டி. வேந்தர் கோ.விசுவநாதன் பொன்னாடை அணிவித்தும், க.ராசாராம் அவர்களின் மைந்தர் ராஜசேகரன் – மருமகள்  சரோஜினி ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கியும் சிறப்பித்தனர். க.ராசாராம் அவர்களின் படத்தை மேனாள் அமைச்சர்கள் வி.வி.சுவாமிநாதன், ெஹச்.வி.ஹண்டே ஆகியோர்  திறந்து வைத்தனர். எழுத்தாளர் ராணி மைந்தன் எழுதிய, “க.ராசாராம்: அரசியல் – சமுகப் – பேராளுமை” எனும் தலைப்பிலான புத்தகத்தைத் தமிழ்நாடு  சட்டமன்றப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் வெளியிட, வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் க.ராசாராம் நூற்றாண்டு மலர் வெளியிடப்பட்டது.

திராவிடர் கழகம்

பங்கேற்றோர்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நூற்றாண்டு விழா கண்காட்சியைத் திறந்துவைத்து வாழ்த்தரங்கத்தில் க.ராசாராம் அவர்களின் ஆளுமையை சிறப்பித்து உரையாற்றினார். திராவிடர் கழகம் சார்பாக, சிதம்பரம் மாவட்டத் தலைவர் பூ.சி.இளங்கோவன்,  துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், இளைஞரணி மாநில இணைச் செயலாளர் சோ.சுரேஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வே.பாண்டு, அரும்பாக்கம் சா.தாமோதரன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *