சென்னை, ஆக.26-அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் களின் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அத்தியா வசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக்கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய, மாநில அரசுகளைக் கண்டித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டக் குழுக்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், 27.08.2026, அன்று காலை 11 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில் அருகில் நடைபெறும்.
இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
