அரசுப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சரின் அண்ணன் ஆய்வு என்ற பெயரில் தொடர்ந்து அத்துமீறும் த.வெ.க.வினர்

1 Min Read

புதுக்கோட்டை, ஜூலை 26- புதுக்கோட்டையில் அரசு முகாமில் அமைச்சரின் சகோதரர் ஆய்வு செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக நிர்வாகிகள் எடுத்து வெளியிட்ட ‘ரீல்ஸ்’ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு சேவைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெறுவதற்கான பதிவு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது.

இந்த முகாமை ஆட்சியர் எம்.அருணா ஆய்வு செய்து விட்டு சென்ற பின், அங்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸின் மூத்த சகோதரர் முகமது இப்ராஹிம், மாநகராட்சி கவுன்சிலர் சேட் (எ) அப்துல் ரகுமான் மற்றும் கட்சியினர் அங்கு வந்தனர். அவர்களை மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் அழைத்துச் சென்று முகாம் குறித்து விளக்கினார். அப்போது, ஆவணங்களை எடுத்துப் பார்த்து சில ஆலோசனைகளை இப்ராஹிம் கூறினார்.

ஆய்வுப் பணி முடிந்ததும் புறப்பட்ட முகமது இப்ராஹிமை மண்டபத்தின் வாசல் வரை சென்று ஆணையர் வழியனுப்பி வைத்தார். இது தொடர்பான நிர்வாகிகள் எடுத்த ரீல்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரசு பணிகளில் கட்சி நிர்வாகிகள் ஆய்வுக்கு செல்லக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ள நிலையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *