அறிவியலாளர் மைக்கேல் ஃபாரடே நினைவு நாள் இன்று (25-08-1867) 

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

வேதியியலாளராக வும் இயற்பியலாளராக வும் முக்கியமான பங்களிப்பைச் செய் திருக்கிறார் மைக்கேல் ஃபாரடே. மின்காந்த வியல், மின் வேதியியல்  துறைகளில் இவர் அளித்த பங்களிப் பின் காரணமாக, மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். இவர் முயற்சியின் காரணமாகவே மின்சாரம் பொதுப் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.

1791, செப்டம்பர் 22 அன்று இங்கிலாந்தில் பிறந்தார். சர். ஹம்ப்ரி டேவி, ஃபாரடேயின் விருப்பப்படி உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார். 1821 இல் மின்காந்த சுழற்சி பற்றிய கட்டுரையை வெளியிட்டார். மின் மோட்டாரையும் டைனமோவையும் கண்டறிந்தார்.  மின் கட்டணத்திற்கும் மின் கொள்ளளவுக்கும் யூனிட்டைப் பயன்படுத்தினார்.  ஒரு முறை விஞ்ஞானி ஹம்ப்ரி டேவியிடம் உங்கள் கண்டறிதலில் எதைச் சிறப்பாகக் கருதுகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு, ”மைக்கேல் ஃபாரடே” என்று பதிலளித்தார் ஹம்ப்ரி டேவி.

1867, ஆகஸ்ட் 25 அன்று 77 ஆவது வயதில் ஃபாரடே மறைந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *