வேதியியலாளராக வும் இயற்பியலாளராக வும் முக்கியமான பங்களிப்பைச் செய் திருக்கிறார் மைக்கேல் ஃபாரடே. மின்காந்த வியல், மின் வேதியியல் துறைகளில் இவர் அளித்த பங்களிப் பின் காரணமாக, மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். இவர் முயற்சியின் காரணமாகவே மின்சாரம் பொதுப் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.
1791, செப்டம்பர் 22 அன்று இங்கிலாந்தில் பிறந்தார். சர். ஹம்ப்ரி டேவி, ஃபாரடேயின் விருப்பப்படி உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார். 1821 இல் மின்காந்த சுழற்சி பற்றிய கட்டுரையை வெளியிட்டார். மின் மோட்டாரையும் டைனமோவையும் கண்டறிந்தார். மின் கட்டணத்திற்கும் மின் கொள்ளளவுக்கும் யூனிட்டைப் பயன்படுத்தினார். ஒரு முறை விஞ்ஞானி ஹம்ப்ரி டேவியிடம் உங்கள் கண்டறிதலில் எதைச் சிறப்பாகக் கருதுகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு, ”மைக்கேல் ஃபாரடே” என்று பதிலளித்தார் ஹம்ப்ரி டேவி.
1867, ஆகஸ்ட் 25 அன்று 77 ஆவது வயதில் ஃபாரடே மறைந்தார்.
