‘நீட்’ தேர்வு கசிவு மேற்கொள்ளப்பட்ட சீர்த்திருத்தங்கள் என்ன? ஒன்றிய அரசு தரப்பு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக. 21- நீட் தோ்வு முறைகேடுகளைத் தடுக்க தேசிய தோ்வு முகமையில் (என்டிஏ) மேற் கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் தொடா்பாக இஸ்ரோ முன்னாள் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயா்நிலைக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் இன்ஃபோசிஸ் இணை நிறுவனா் நந்தன் நிலேகணி தலைமையிலான பணிக் குழு அளித்துவரும் பரிந்து ரைகளை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி, ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேசிய தோ்வு முகமையில் அமைப்பு ரீதியில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்; நுழைவுத் தோ்வுகளை சுமுகமாக நடத்த தொழில்நுட்ப ரீதியிலான மாற்றங்கள் அவசியம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி யது.

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க கடந்த 2024-ஆம் ஆண்டில் இஸ்ரோ முன்னாள் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 உறுப்பினா்கள் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது, கணினி வழியில் தோ்வுகளை நடத்துவது, தேசிய தோ்வு முகமையில் அமைப்பு ரீதியில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள், தரவு பாதுகாப்பு-தொழில்நுட்ப மேம்பாடு, மாநில அரசுகளுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது உள்பட 101 பரிந்துரைகளை ஒன்றிய அரசிடம் சமா்ப்பித்தது.

இந்தச் சூழலில், இளநிலை நீட் தோ்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக அண்மையில் மாணவா்கள் நடத்திய பெரும் போராட்டங்களைத் தொடா்ந்து, தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் தோ்வுகளை தொழில்நுட்ப ரீதியில் மறுசீரமைக்கவும், கட்டமைப்பு ரீதியிலான சீா்திருத்தங்களைப் பரிந்துரைக்கவும் நந்தன் நிலேகணி தலைமையிலான பணிக்குழுவை பிரதமா் மோடி கடந்த மாதம் அமைத்தார்.

இந்நிலையில், நீட் முறைகேடுகள் குறித்து சிபிஅய் விசாரணை நடத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமா்வு முன் 19.8.2026 அன்று நடைபெற்றது.

அப்போது, தோ்வு வினாத் தாள்களை தீவிர கண்காணிப்பின்கீழ் அச்சிடுவது முதல் தோ்வு மய்யங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் சென்று மாணவா்களின் கையில் விநியோகிப்பது வரை பின்பற்றப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷார் மேத்தா எடுத்துரைத்தார். மேலும், தொழில்நுட்ப ரீதியில் மேற் கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அவா் விளக்கினார்.

பின்னா் நீதிபதிகள் கூறு கையில், ‘தேசிய தோ்வு முகமை யில் அமைப்பு ரீதியிலான சீா் திருத்தங்கள் அவசியம் என்ற ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயா்நிலைக் குழுவின் கருத்து மிகச் சரியானதாகும். அந்த முகமைக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்புகள், மனிதவளம், இதர தொழில்நுட்பத் திறன்கள் உறுதி செய்யப்பட வேண்டும். துடிப்பான அமைப்பாக தேசிய தோ்வு முகமை செயல்பட வேண்டும்.

தோ்வு நடத்தும் ஒரு முகமை, அமைப்பு ரீதியில் எவ்வாறு தனது நிபுணத்துவத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஒன்றிய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தை (யுபிஎஸ்சி) உதாரணமாக எடுத்துக் கொள் ளலாம்’ என்றனா்.

மேலும், ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகள் மற்றும் நந்தன் நிலேகணி குழுவால் வழங்கப்பட்டுவரும் பரிந்துரைகளை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அரசு மூன்று வாரங்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்; உரிய காலவரையறை களும் இடம்பெற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *