தீஸ்தா நதி நீர் விவகாரத்தில் இந்தியாவுடன் உறவுகள் மோசமடைய விரும்பவில்லை: வங்கதேசம்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

டாக்கா, ஆக. 19- இமயமலையில் உற்பத்தியாகும் தீஸ்தா நதி, சிக்கிம், மேற்கு வங்கத்தில் பாய்ந்து, பின்னா் வங்கதேசத்தில் நுழைகிறது. இந்த நதி நீரை பகிர்ந்துகொள்வது தொடா்பாக இந்தியா-வங்கதேசம் இடையே கடந்த 1980-களில் இருந்தே பேச்சுவார்த்தைகள் தொடா்ந்து வருகின்றன.

கடந்த 1983-இல் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தின்படி 39 சதவீத நீா் இந்தியாவுக்கும், 36 சதவீத நீா் வங்கதேசத்துக்கும் பகிரப்பட்டது. எஞ்சிய 25 சதவீதம் மீது முடிவெடுக் கப்படாமல் நிலுவையில் உள்ளது. பேச்சுவார்த்தைகள் தொடா்ந்து வரும் நிலையில், நீண்ட கால விரி வான ஒப்பந்தம் இதுவரை எட்டப் படவில்லை.

இதனிடையே, கடந்த ஜூன் மாதம் சீனாவுக்கு பயணம் மேற் கொண்ட வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான், தீஸ்தா புனரமைப்புத் திட்டத்துக்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வை விரைவு படுத்துவதில் சீனாவின் உதவி யைப் பெற பேச்சுவார்த்தை மேற் கொண்டார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, வங்கதேசத்தின் இந்த முடிவு உத்தி ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தீஸ்தா நதி நீா் விவகாரத்துக்கு சம்பந்தப்பட்ட தரப்பினரால் பேச்சுவார்த்தை மூலம் தீா்வுகாணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.

இந்நிலையில், வங்கதேச தலைநகா் டாக்காவில் தீஸ்தா நதி புனரமைப்புத் திட்டம் தொடா்பாக நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அந்நாட்டின் நீா்வளத் துறை அமைச்சா் ஷாஹித்துதீன் சவுதரி, ‘அண்டை நாடான இந்தியா, நமது நட்பு நாடு. ஒரு நண்பன், மற்றொரு நண்ப னின் நலன்களைக் காக்க வேண்டும். தீஸ்தா நதி நீா் விவகாரத்தில் இந்தியா தனது நலன்களைக் கருத்தில் கொள் வதைப் போல வங்கதேசமும் செயல்பட வேண்டியுள்ளது.

இந்த விவகாரத்தால் இருதரப்பு உறவுகள் மோசமடைய நாங்கள் விரும்பவில்லை. தீஸ்தா நதித் திட்டம் தொடா்பாக பிரதமா் தாரிக் ரஹ்மான் தொடா் ஆலோசனை களில் ஈடுபட்டுள்ளார்’ என்றார்.

தீஸ்தா நதி நீா் பகிர்வு விவகாரத் தால் இந்தியா உடனான உறவுகள் மோசமடைய விரும்பவில்லை என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது. அதேநேரம், இந்தியாவைப் போல வங்கதேசமும் தனது நலன்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது என்றும் அந்த நாடு கூறியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *