ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தருமபுரி/மேட்டூர், ஆக.19- ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து 12 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 17ஆம் தேதி 5 மணி அளவீட்டின் போது விநாடிக்கு 9,500 கனஅடியாக நீர்வரத்து பதிவானது.

அன்று காலை 6 மணியளவில் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உயர்ந்தது. நேற்று (18.8.2026) காலை 6 மணி அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. ஆனால், காலை 10 மணியளவில் நீர்வரத்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாகக் படிப்படியாகக் குறைந்தது.

இதனிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் (17.8.2026) காலை விநாடிக்கு 8,555 கனஅடியாகவும், மாலை விநாடிக்கு 12,174 கனஅடியாகவும், நேற்று  (18.8.2026) காலை விநாடிக்கு 12,350 கனஅடியாகவும் உயர்ந்த நீர்வரத்து மாலையில் விநாடிக்கு 12,243 கனஅடியாக குறைந்தது.

குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீர்மட்டம் 82.98 அடியாகவும், நீர் இருப்பு 44.99 டிஎம்சியாகவும் உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *