மதுரை, ஆக. 19- உயிருடன் இருக்கும் நிலையில் இறப்புச் சான்று வழங்கிய வருவாய்த் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மூதாட்டி ஒருவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (18.8.2026) மனு அளித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட் டத்தில் கோவில்பாப்பாகுடி கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பிள்ளை (62) ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:
எனது இளைய மகன் பெருமாள், அவரது மனைவி சுந்தரியைப் பிரிந்து வாழ்ந்தார். இது தொடர்பாக சுந்தரி மணமுறிவு வழக்குத் தொடந்தார்.
இதனிடையே அடை யாளம் தெரியாத முறையில் மார்ச் மாதம் எனது மகன் இறந்தார். எனது மகன் பெயரில் வங்கியில் அடமானமாக உள்ள 7 பவுன் தங்க நகைகளை மீட்கவும், எனது மகன் பெயரிலுள்ள வீட்டு மனையை விற்பனை செய்யும் நோக்கில் அவரது மனைவி சுந்தரி நான் உயிருடன் இருக் கும்போதே இறந்து விட்டதாகச் சான்று பெற்று வங்கியில் சமர்ப் பித்துள்ளார்.
கள ஆய்வு செய்யாமல் போலி்ச்சான்று வழங்கிய கோவில்பாப்பாகுடி கிராம நிர்வாக அலுவலர் உட்பட இதற்குக் காரணமான வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

