ஜாதி, மத அடையாளங்களோடு கல்வி வளாகத்திற்கு வரக் கூடாது : கல்வி அமைச்சர்

1 Min Read

சென்னை, ஜூன் 13 – மதம், ஜாதி சம்பந்தப்பட்ட அடையா ளங்களோடு கல்வி வளாகங்களுக்கு யாரும் வரக் கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள் ளார். சென்னை கோட்டூர்புரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறிய கயிறாக இருந்தாலும் நான் வரும்போது கழட்டிப் போட்டு விட்டுத்தான் வருகிறேன். இங்கு ஒற்றுமையை வளர்க்கும் எதுவாக இருந்தாலும் வரலாம். பிரிவினையை வளர்க்கும் எதற்கும் இடமில்லை. சமூக நீதிக்கு மட்டுமே இடம் இருக்கிறது” என்று வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் முதற்கட்டமாக அய்ந்தாயிரம் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பைத்தான் உள்ளிட்ட கோடிங் பயிற்சி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *