மதுரையில் உயிருடன் இருக்கும்போதே மூதாட்டிக்கு இறப்புச் சான்று வழங்கிய அதிகாரிகள்!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மதுரை, ஆக. 19- உயிருடன் இருக்கும் நிலையில் இறப்புச் சான்று வழங்கிய வருவாய்த் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மூதாட்டி ஒருவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (18.8.2026) மனு அளித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட் டத்தில் கோவில்பாப்பாகுடி கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பிள்ளை (62) ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:

எனது இளைய மகன் பெருமாள், அவரது மனைவி சுந்தரியைப் பிரிந்து வாழ்ந்தார். இது தொடர்பாக சுந்தரி மணமுறிவு வழக்குத் தொடந்தார்.

இதனிடையே அடை யாளம் தெரியாத முறையில் மார்ச் மாதம் எனது மகன் இறந்தார். எனது மகன் பெயரில் வங்கியில் அடமானமாக உள்ள 7 பவுன் தங்க நகைகளை மீட்கவும், எனது மகன் பெயரிலுள்ள வீட்டு மனையை விற்பனை செய்யும் நோக்கில் அவரது மனைவி சுந்தரி நான் உயிருடன் இருக் கும்போதே இறந்து விட்டதாகச் சான்று பெற்று வங்கியில் சமர்ப் பித்துள்ளார்.

கள ஆய்வு செய்யாமல் போலி்ச்சான்று வழங்கிய கோவில்பாப்பாகுடி கிராம நிர்வாக அலுவலர் உட்பட இதற்குக் காரணமான வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *