முதலமைச்சர் வரும்போது எழுந்து நிற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 18– தமிழ்நாடு சட்டப் பேரவைக்குள், முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு அமைச்சர் ரமேஷ் வைத்த குற்றச்சாட்டு குறித்து விவாதம் நடைபெற்றது. பின்னர், அவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் இது குறித்து விளக்கம் அளித்தார்.

பேரவைக்குள் முதலமைச்சர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்து இருக்கிறார் என்ற ரமேஷின் குற்றச்சாட்டுக்கு திமுக சார்பில் கே.என். நேரு விளக்கம் கொடுத்தார்.

பிறகு, அவைத் தலைவர் அளித்த விளக்கத்தில், பேரவைக்குள் முதலமைச்சர் வரும்போது, அவை கூடுவதற்கு முன்பு இருபக்கமும் வணக்கம் தெரிவிக்கும்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுந்து நின்று வணக்கம் தெரிவிப்பதையும் பார்த்திருக்கிறேன். சில உறுப்பினர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள்.

இந்த அவையின் கண்ணியம் என்பது பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் மரியாதை தெரிவித்துக் கொள்வது என்பது அடிப்படை. அவரவர்களுக்கு உரிய கட்சிப் பாகுபாடுகளை மறந்து மதிப்பளிக்கின்றார் என்பதுதான் அவையின் வரலாறு, பண்பாடு.

எனவே அவைக்குள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் வரும்போது எழுந்து நின்று மரியாதை தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.

ஆனால், அப்படி தெரிவிப்பது என்பது தமிழருடைய பண்பாடு, அதனை கட்டிக்காக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை பற்றிக் கூட அவரவர் விருப்பத்துக்கு விட்டுவிடுகிறேன், யாரையும் கட்டுப்படுத்த விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார் ஜே.சி.டி. பிரபாகரன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *