சட்டமன்றத்திலிருந்து தி.மு.க. வெளிநடப்பு: எல்லாவற்றுக்கும் தி.மு.க. ஆட்சியைக் குறை கூறுவதா? – உதயநிதி

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக.17 மாணவன் கொலை, பாலியன் வன்கொடுமை, போதைப்பொருள் குறித்து எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கம் இல்லை என குற்றம்சாட்டி சட்டமன்றத்தில் இருந்து திமுக  சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

உரிய விளக்கமும், தெளிவான பதிலும் அளிக்காத தவெக அரசு, எல்லாவற்றிக்கும் திமுக ஆட்சியை பற்றி பேசுகிறது.

மாணவர்கள் கொலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதிலளிக்காமல் எங்கள் மீது குற்றம்சாட்டுகின்றனர்.

தெளிவான விளக்கம் அளிக்கவில்லை

எந்த அமைச்சர்களும் துறை சார்ந்து பதிலளிப்பதில்லை, சட்டம்- ஒழுங்கிற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் சட்டமன்றத்திற்கு வரவில்லை.

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை தொடர்பாக தவெக அரசு எந்தவிதமான தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை.

இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *