திருநெல்வேலி மாநாட்டிற்கு கன்னியாகுமரி கழகத் தோழர்கள் பங்கேற்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருநெல்வேலி, ஆக. 17- எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80ஆவது ஆண்டு வெற்றி விழா மாநாடு திருநெல்வேலியில் ஆகஸ்ட் 19 அன்று மாலை 5 மணிக்கு திருநெல்வேலி டவுன் வாகையடி முனையில் நடைபெற உள்ளது.  திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

அந்த மாநாட்டிற்கு தோழர்களை பொது மக்களை அழைக்கின்ற வகையில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், நாகர்கோவில் கன்னியா குமரிக்கு வருகை தந்து தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். தோழர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென தோழர்களை கேட்டுக் கொண்டார்

இந்த நிகழ்ச்சியில் கழக கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் மா.மு.சுப்ரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட காப்பாளர் ம.தயாளன், துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் மாமணி, மாவட்ட மகளிர் அணித் தலைவர் இந்திரா மணி, மாவட்ட துணைச் செயலாளர் எஸ். அலெக்சாண்டர், மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் மஞ்சு குமாரதாஸ், கோட்டார் பகுதித் தலைவர் ச.ச.மணிமேகலை, தொழிலாளர் அணி செயலாளர் க.யுவான்ஸ், கழக தோழர்கள் ஞா. பிரான்சிஸ், அரும்பாக்கம் தாமோதரன், திமுக நிர்வாகி பொன்முடி, மாணவர் கழக பொறுப் பாளர் இனியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *