திருநெல்வேலி, ஆக. 17- எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80ஆவது ஆண்டு வெற்றி விழா மாநாடு திருநெல்வேலியில் ஆகஸ்ட் 19 அன்று மாலை 5 மணிக்கு திருநெல்வேலி டவுன் வாகையடி முனையில் நடைபெற உள்ளது. திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
அந்த மாநாட்டிற்கு தோழர்களை பொது மக்களை அழைக்கின்ற வகையில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், நாகர்கோவில் கன்னியா குமரிக்கு வருகை தந்து தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். தோழர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென தோழர்களை கேட்டுக் கொண்டார்
இந்த நிகழ்ச்சியில் கழக கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் மா.மு.சுப்ரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட காப்பாளர் ம.தயாளன், துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் மாமணி, மாவட்ட மகளிர் அணித் தலைவர் இந்திரா மணி, மாவட்ட துணைச் செயலாளர் எஸ். அலெக்சாண்டர், மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் மஞ்சு குமாரதாஸ், கோட்டார் பகுதித் தலைவர் ச.ச.மணிமேகலை, தொழிலாளர் அணி செயலாளர் க.யுவான்ஸ், கழக தோழர்கள் ஞா. பிரான்சிஸ், அரும்பாக்கம் தாமோதரன், திமுக நிர்வாகி பொன்முடி, மாணவர் கழக பொறுப் பாளர் இனியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
