குடியேற்றம், ஆக. 17- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கூட்டம் மாவட்ட செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி தலைமையில் 16.8.2026 அன்று மாலை 6 மணிக்கு குடியேற்றம் புவனேசு வரிப்பேட்டையில் உள்ள பெரியார் அரங்கில் நடை பெற்றது.
நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ப. ஜீவானந்தம் அனைவரை யும் வரவேற்றார். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர. அன்பரசன் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஆசிரியர் பி. தனபால் ஆகியோர் கருத்துரை வழங்கினர். பகுத்தறிவாளர் கழக நகரச் செயலாளர் மு.பிரகாசம் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வரும் 12.09.2026 அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்துவது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுவது.
இளைஞர்களிடம் பகுத்தறிவு மற்றும் போதை ஒழிப்பு கருத்துகளை கொண்டு சேர்க்கும் வகையில், காட்பாடி ஆர்.அய்சி.டி. கல்வி நிறுவனத் துடன் இணைந்து “போதையில்லா சமுதாயம் உருவாக்குவோம்” கருத்தரங்கம் நடத்துவது என அனைவராலும் ஒருமனதாக தீர்மானிக்கப் பட்டது.
குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் கழகச் செயலாளராக மு.பிர காசத்தை ஒருமனதாக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
