வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

குடியேற்றம், ஆக. 17- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கூட்டம் மாவட்ட செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி தலைமையில் 16.8.2026 அன்று மாலை 6 மணிக்கு  குடியேற்றம் புவனேசு வரிப்பேட்டையில்  உள்ள பெரியார் அரங்கில் நடை பெற்றது.

நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ப. ஜீவானந்தம் அனைவரை யும்  வரவேற்றார். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர. அன்பரசன் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் வி.இ.சிவக்குமார்,  மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஆசிரியர் பி. தனபால் ஆகியோர் கருத்துரை வழங்கினர். பகுத்தறிவாளர் கழக நகரச் செயலாளர்  மு.பிரகாசம் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வரும் 12.09.2026 அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்துவது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுவது.

இளைஞர்களிடம் பகுத்தறிவு மற்றும் போதை ஒழிப்பு கருத்துகளை கொண்டு சேர்க்கும் வகையில், காட்பாடி ஆர்.அய்சி.டி. கல்வி நிறுவனத் துடன் இணைந்து “போதையில்லா சமுதாயம் உருவாக்குவோம்” கருத்தரங்கம் நடத்துவது என அனைவராலும் ஒருமனதாக தீர்மானிக்கப் பட்டது.

குடியேற்றம் நகர பகுத்தறிவாளர்  கழகச் செயலாளராக  மு.பிர காசத்தை ஒருமனதாக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *