ஆளுநர் நிகழ்ச்சிகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்!

சிறப்பு புத்தக சலுகைகள்

தமிழ் மொழி வாழ்த்துக்கு முதலிடம் தந்த
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டும் நடவடிக்கைக்குப் பாராட்டுகள்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

 

சுதந்திர தின விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடலை முதலில் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளரின் சுற்றிக்கையை மாற்றி, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாட வேண்டும் என்று வகை செய்த சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் பாராட்டு தெரிவித்து என்று  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும், பிற நீதிமன்றங்களிலும் ஆகஸ்ட் 15 (இந்திய ‘சுதந்திர நாள்’) விழாவின்போது, நடைபெறும் கொடியேற்று நிகழ்ச்சியில், முதலில் வந்தே மாதரம் பாடப்படும் என்றும், தேசியக் கொடி ஏற்றிய பின்னர் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள விசாரணை நீதிமன்றங்கள் ஆகியவற்றுக்குத் தலைமைப் பதிவாளர் தீப்தி அறிவுநிதி ஆகஸ்ட் 14 அன்று சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். இந்தத் தகவல் செய்திகளில் வெளியாகி சர்ச்சையானது.

ஆனால் அன்று மாலையே, அதை மாற்றி, தமிழ் மொழி வாழ்த்து முதலில் பாடப்படும் என்று புதிய சுற்றறிக்கை வெளிவந்ததுடன், நேற்று (15.8.2026) காலை நடந்த நிகழ்ச்சியில், முதலில் தமிழ் மொழி வாழ்த்து பாடப்பட்டு, நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

உயர்நீதிமன்றத்துக்குப் பாராட்டு!

தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அங்கீகரித்து வெளியிடப்பட்டிருந்த முந்தைய அரசாணையைப் பின்பற்றியும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படியும், தமிழ்மொழி வாழ்த்துக்குரிய மரியாதையை வழங்கி நிகழ்வை மாற்றி அமைத்து நடத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நமது பாராட்டுகள்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டும் நடவடிக்கைக்காக, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்பமை எஸ்.ஏ.தர்மாதிகாரி அவர்களுக்கும், அனைத்து நீதிபதிகளுக்கும், மற்ற பொறுப்பாளர்களுக்கும் நமது பாராட்டுகள்!

மேலும், உயர்நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி, தமிழ்நாடு ஆளுநர் மாளிகையிலும், ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்            

16.8.2026        

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *