மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் நாற்பது கேள்விகள் கேட்கப்படும்! ஒன்றிய அரசு அறிவிப்பு

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக. 16- 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக 40 கேள்விகள் அடங்கிய புதிய வினாப்பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஜாதி குறித்த கேள்வியும் ஒன்றாகும்.

நாடு முழுவதும் 2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான முதற் கட்டப் பணிகள் தீவிரமாகத் தொடங்கி யுள்ளன. 1948ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கணக்கெடுப்பு அலுவலர்கள் தங்கள் எல்லைக்குட் பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று, குடும்ப அட்டவணை மூலம் உரியத் தகவல்களைச் சேகரிக்க உள்ளனர். மக்கள்தொகை, சமூகம், கல்வி மற்றும் பொருளாதார விவரங்களை முழுமையாகத் திரட்டும் வகையில் இந்த விரிவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வினாப்பட்டியலில் மொத்தம் 40 கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

இதில் தனிநபரின் பெயர், குடும்பத் தலைவருடனான உறவு, பாலினம், பிறந்த தேதி, வயது, திருமண நிலை, மதம், பட்டியல் இனம் அல்லது பட்டியல் – பழங்குடி, மாற்றுத்திறன் விவரம், தாய்மொழி, கல்வி அறிவு, டிஜிட்டல் கல்வி அறிவு மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.

மேலும், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இடம், வங்கி கணக்குகள், கைப்பேசி எண், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், பாஸ்போர்ட் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் போன்ற முக்கியமான விவரங்களும் இதில் சேகரிக்கப்பட உள்ளன.

தகுதியுள்ள பெண்களிடம் குழந்தைகள் பிறந்த விவரங்கள் மற்றும் இடப்பெயர்வு குறித்த கேள்விகளும் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான கேள்விகள் பட்டியலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மிக முக்கியமாக, பொதுமக்கள் குறிப்பிடும் ஜாதியை அப்படியே பதிவு செய்யும் வகையில் இந்தக் கேள்விகள் வடிவமைக்கப் பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

வழக்கமாக பட்டியல் பிரிவு, பழங்குடியினர் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு என்ற மூன்று பிரிவுகள் இந்த கேள்விகளில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 1931ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் தற்போதுதான் முதன் முறையாக ஜாதிவாரிக் கணக் கெடுப்பு நடைபெறுகிறது என்ற அடிப்படையில் இந்த விவரங்களை ஒன்றிய அரசு வெளியிட்டது.

கணக்கெடுப்பின் நோக்கம்: காங்கிரஸ் சந்தேகம்!

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக ஒன்றிய அரசின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிடுகையில்,பீகார் மற்றும் தெலங்கானா ஜாதி கணக்கெடுப்புகளில் செய்தது போல, முன்கூட்டியே தயாரிக் கப்பட்ட மாநில வாரியான பட்டியலுடன் ஜாதி கேள்வி கேட்கப்பட்டு, அதற்குரிய பதில்களில் மட்டும் உரிய குறியீடு இடப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முறையாக இது நடக்கவில்லை. இது ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நோக்கத்தின் மீது கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது. ஜாதித் தகவல்கள் கணக்கெடுப்பு நோக்கங்களுக்காக அல்ல, மாறாக பரந்த சமூக, பொரு ளாதார நோக்கங்களை அடைவதற்காகவே சேகரிக்கப் பட வேண்டும், என்று குறிப் பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *