புதுடில்லி, ஆக. 14 குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட கைப்பேசி செயலிகளில் Sexually Explicit விளம்பரங்கள் இடம்பெறுவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா? இத்தகைய வெளிப்படையான உள்ளடக்கங்களுக்கு குழந்தைகள் ஆளாகாமல் தடுப்பதற்காக, Google Play Store, Apple App Store மற்றும் App Developers உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பு களுக்கு அரசு வழங்கியுள்ள குறிப்பிட்ட வழிமுறைகள் மற்றும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை? மற்றும் Child Sexual Abuse Material CSAM அகற்றுவதை உறுதி செய்வதற்காக அரசு மேற்கொண்டுள்ள குறிப்பிட்ட நடவடிக்கைகள் யாவை?
இதற்கு ஒன்றிய அமைச்சர் அளித்த பதில் வருமாறு;–
அரசின் கொள்கைகள், குழந்தைகள் உட்பட அனைத்து இணையப் பயனர் களுக்கும் திறந்த, பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்புக்கூறலுடன் கூடிய இணையச் சூழலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 (IT Act) மற்றும் தகவல் தொழில்நுட்பம் (இடைநிலையர்கள் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள்) விதிகள், 2021 (IT Rules) ஆகியவை இணைந்து, டிஜிட்டல் தளங்களில் சட்டவிரோதமான மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கையாள்வதற்கான கடுமையான சட்டக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளன.
குழந்தைகளுக்கான சமூக ஊடகங்கள் மற்றும் கைப்பேசி செயலிகளில் CSAM
இந்தத் தளங்களில் குழந்தைகள் பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பான உள்ளடக்கம் (Child Sexual Abuse Material CSAM) இடம்பெற்றதாக அண்மையில் வெளியான செய்திகளை இந்திய அரசு தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தளங்களுக்கு உடனடி திருத்த திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் (NCPCR) இந்த சமூக ஊடகத் தளங்களுக்கு அறிவிப்புகளை அனுப்பியுள்ளது. சட்டக் கட்டமைப்பு! IT Act மற்றும் IT Rules இணைந்து, டிஜிட்டல் நலன், பயனர் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான டிஜிட்டல் பங்கேற்பை உறுதி செய்வதற்கான சட்டக் கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. தகவல் தொழில் நுட்பச் சட்டம், 2000 IT Actன் கீழ் பல்வேறு வழங்கப் பட்டுள்ளன. இணையக் குற்றங் களுக்கு தண்டனைகள் அவற்றில்:
அடையாளத் திருட்டு பிரிவு 66C
ஆள்மாறாட்டம் பிரிவு 66D
தனியுரிமை மீறல் பிரிவு 66E
.ஆபாச அல்லது பாலியல் வெளிப்படையான உள்ளடக்கத்தை வெளியிடுதல் அல்லது பரப்புதல் பிரிவுகள் 67, 67A மற்றும் 67B ஆகியவை அடங்கும். மேலும், பிரிவுகள் 78 மற்றும் 80 காவல்துறைக்கு இத்தகைய குற்றங்களை விசாரிப்பதற்கான அதிகாரத்தை வழங்குகின்றன.
கல்வித் துறையில் நடவடிக்கைகள்
கல்வி அமைச்சகம் 2020 ஜூலையில் PRAGYATA Digital Education Guidelines வெளியிட்டது. இது பாதுகாப்பான மற்றும் பயனுள்ள இணையவழிக் கல்விக்கான கட்டமைப்பை வழங்கு கிறது. மாணவர்களின் நலன் மற்றும் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை பொறுப்புடன் பயன்படுத் துவதற்கும் இது முக்கியத்துவம் அளிக்கிறது.
CBSE, டிஜிட்டல் ஒழுக்கம் (Digital Etiquette) தொடர்பான வழிகாட்டுதல்கள், ஆசிரியர்களுக்கான சைபர் பாதுகாப்புப் பயிற்சி, Cyber Security Handbook வெளியீடு மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்த பள்ளிகளில் Cyber Clubs அமைப்பதற்கான அறிவுறுத்தல்கள் மூலம் இந்த முயற்சிகளுக்கு கூடுதல் ஆதரவு அளித்துள்ளது.
NCERT தனது பாடத்திட்டத்திலும் சைபர் பாதுகாப்பை இணைத்துள்ளது. இதில் XI மற்றும் XII வகுப்புகளுக்கான “Societal Impacts” என்ற பாடப்பகுதியும் அடங்கும். மேலும், CIETNCERT, சைபர் பாதுகாப்பு தொடர்பான கல்வி வளங்களை உருவாக்கி பரப்பியுள்ளது.
இவ்வாறு ஒன்றிய அமைச்சர் பதிலளித்தார்.
