சுண்டைக்காய் நாடு இலங்கை இந்தியாவை சீண்டுகிறது ஒன்பது தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

சிறப்பு புத்தக சலுகைகள்

ராமேசுவரம், ஆக.14 ராமேசுவரத்தில் இருந்து நேற்று (13.8.2026) 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதில் விசைப்படகு ஒன்றில் 9 மீனவர்கள் சென்று இருந்தனர். எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

நடுக்கடலில் மீன்பிடித்தபோது 2 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். விசைப் படகையும், அதில் இருந்த 9 மீனவர்களையும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடித்து கைது செய்தனர். மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். 5 நாட்களுக்கு முன்பு ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகின் என்ஜின் பழுதாகி, இலங்கை பகுதியில் கரை ஒதுங்கியதால் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் மீண்டும் 9 மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்தது ராமேசுவரம் மீனவர்களை வேதனை அடையச்செய்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *