
புதுடில்லி, ஆக. 14- தனியார் தொலைக்காட்சி ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய மான்சி ராஜ்புத் என்ற பெண், தான் கல்வியில் மிகச் சிறந்து விளங்குவதாகவும், தான் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடை வதற்குக் கடந்த பல ஆண்டுகளாகத் தான் மேற் கொண்டு வரும் ‘காவடி யாத்திரையே’ காரணம் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார். அரியானாவிலிருந்து அரித் வாருக்குக் காவடி எடுத்துச் செல்லும் வழக்கத்தைக் கொண்டவர் இவர்.
மதிப்பெண் பட்டியலால் உடைந்த உண்மை!
இவரது இந்தப் பேச்சு வெளியான அடுத்த கணமே, அவரது குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவர் (தந்தை அல்லது சகோதரராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது) சமூக வலைதளங்களில் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை ஆதாரத்துடன் வெளியிட்டார்.
மான்சி தனது 20ஆவது வயதில்தான் பத்தாம் வகுப் புத் தேர்வை எழுதியுள்ளார்.
அத்தேர்விலும் அவர் தேர்ச்சி பெறவில்லை. குறிப் பாகக் கணிதப் பாடத்தில் வெறும் 2 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார்.
“சந்தேகம் இருந்தால் அரியானா அரசுப் பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள லிங்கிற்குச் சென்று மதிப் பெண் பட்டியலைச் சரிபார்த்துக் கொள்ளலாம்” என்றும் அந்த உறவினர் சவால் விடுத்துப் பதி விட்டுள்ளார்.
அத்துடன் நிறுத்தாமல், எக்ஸ் (X) தளத்தில் ஹிந்தி யில் பதிவிட்டுள்ள அந்த உறவினர், மான்சியின் அன்றாட வாழ்க்கை முறையையும் கடுமையாக விமர்சித்துள்ளார்:
“இவருக்கு ஒரு ரொட்டி கூட சுடத் தெரியாது. இரவு முழுவதும் கைத் தொலைபேசியில் சமூக வலைதளங்களைப் பயன் படுத்திக் கொண்டு, அதிகாலை 4 மணிக்குத்தான் தூங்கச் செல்வார். மறுநாள் மதியம் 3 மணிக்குத்தான் எழுவார்! “காவடி யாத்திரை” செல்ப வர்களின் உண்மையான லட்சணம் மற்றும் செயல்பாடு இதுதான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையிலேயே, குடும்பத்தைச் சேர்ந்தவரே இந்தத் தகவல்களை வெளிப் படையாக எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
