சென்னை, ஆக. 14- விஜிபி குழுமத் தலைவர் டாக்டர்.வி.ஜி.சந்தோசம் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, ஈஞ்சம்பாக்கம் விஜிபி ஹெரிடேஜ் ரிசார்ட்டில், வள்ளுவர் கார்டனில் ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
இதில் பள்ளி மாணவ –மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலேசிய தமிழர் சமூகப் பண்பாட்டு நட்புறவு மன் றத்தின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
மாலை 5.30 மணிக்கு வி.ஜி.சந்தோசம் அண்ணாச்சியின் நிலைத்தப் புகழுக்குக் காரணம் குடும்பமா? குவலயமா? என்ற தலைப்பில், சென்னைப் பல்கலைக்கழக தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் உலகநாயகி பழனியின் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.
மாலை 6.30 மணிக்கு, பிறந்தநாள் வாழ்த்தரங்கத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கு கின்றன. விஜிபி குழுமத் தின் மேலாண்மை இயக் குநர் விஜிபி ரவிதாஸ் வரவேற்புரையாற்றுகிறார். சுகஜீவ ஊழியங்களின் நிறுவநர் வி.ஜி.செல்வராஜ் முன்னிலை வகிக்கிறார்.
இவ்விழாவில் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமை தாங்கி, 90ஆம் ஆண்டு வாழ்வியல் சாதனை பிறந்தநாள் மலரினை வெளியிட்டு சிறப்புரையாற்றுகின்றார்! மேலும், டாக்டர்.வி.ஜி.சந்தோசம் எழுதிய ‘உலகப் பொதுமறைக்கு ஓர் உரை’ என்ற நூல் வெளியீடு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், டாக்டர் வி.ஜி.சந்தோசத்தின் “வியர்வைத் துளிகள்” காணொலி வெளியீடு மற்றும் வி.ஜி.சந்தோசத்தின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 90 சான்றோர்களுக்கு “விஜிபி நற்றமிழ் விருது” வழங்குதல் ஆகியவை இடம்பெறவுள்ளன.
மேலும், விஜிபியின் 2026ஆம் ஆண்டிற்கான “வாழ்நாள் சாதனையாளர்” விருதினை, ஹண்டே மருத்துவமனையின் நிறுவநரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் எச்.வி.ஹண்டே அவர்களுக்கு வழங்கி சிறப்பிக்க உள்ளனர்!
இவ்விழாவின் நிறைவாக, விஜிபி குழுமத்தின் முதன்மை இயக்குநர்விஜிபி ராஜாதாஸ் அவர்கள் நன்றியுரை ஆற்றுகிறார்.
இவ்விழாவில் பல்வேறு அமைச்சர் பெருமக்கள், அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள், தொழிலதி பர்கள் உள்பட பல்வேறு தமிழறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
