அமெரிக்க வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளர் பதவி விலகல்

OLYMPUS DIGITAL CAMERA

சிறப்பு புத்தக சலுகைகள்

வாசிங்டன், ஆக. 14- அமெரிக்க வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், பதவியில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இதுகுறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘வெள்ளை மாளிகையின் சிறந்த செய்தி தொடர் பாளரும், எனது மிகவும் நம்பிக்கைக்குரிய உதவியாளர்களில் ஒரு வருமான கரோலின் லீவிட், தனது அழகான சிறு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதற்காக இம்மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகவுள்ளார். அவரது இந்த முடிவை மதிக்கிறேன். அவர், இனி எனது முக்கிய வெளி ஆலோசகர்களில் ஒருவராகவும், குடியரசுச் கட்சிக்குள் செல்வாக்கு மிக்க ஒரு குரலாகவும் திகழ்வார்.

வெள்ளை மாளிகை யில் ஒரு உண்மையான தலைவராக திகழ்ந்த கரோலின் லீவிட், 2018 முதல் குறிப்பாக எங்களது வரலாற்று சிறப்புமிக்க 2024ஆம் ஆண்டு மறுதேர்தல் பிரசாரத்தின்போது நீதி, சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்காக போராடு வதில் மிகச் சிறந்த பணியை செய்துள்ளார். இப்பதவியின் வரலாற்றிலேயே மிக சிறந்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர் பாளர்களில் ஒருவராக விளங்கியுள்ளார். அவருக்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து கரோலின் லீவிட் கூறுகையில், ‘வெள்ளை மாளிகை மேடையில் அவர் சார்பாக பேசும் தனிச் சிறப்பை எனக்கு வழங் கிய டிரம்புக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *