சென்னை, ஆக. 13- சட்டப்பேரவையில் பேர வைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் நேற்று (2.8.2026) வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
புதிய உறுப்பினர்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகளை சட்டப்பேரவையில் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக முதல் கூட்டத்தொடரில் கூடுதல் நேரம் வழங்கப் பட்டது.
ஆனால், தற்போது நடைபெற்று வரும் விவாதங்களில் குறுக் கீடுகள் அதிகரித்து வருகிறது. உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகளைத் தவிர்த்து, அவையின் நேரத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
எனவே நேரததை முறைப்படுத்தும் நோக் கில் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் உறுப்பினர்கள் பேசுவதற்கு 7 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.
