புதுடில்லி, ஆக. 12– நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், டில்லி மாணவர் போராட் டத்தின்போது நடந்த தடியடி மற்றும் அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க் கட்சி நாடாளுமுன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, மக்களவையில் வெறும் 36 நிமிடங்களில் 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது சராசரியாக 5 நிமிடங்களில் ஒரு மசோதா என்ற கணக்கில் வருகிறது. சில மசோதாக்களில் நாடாளு மன்ற உறுப்பினர்கள் திருத் தங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால், அவை அதிக காலம் எடுத்து கொண்டன.
நேற்று (11.8.2026) மக்களவையில் கேரள (பெயர் மாற்றம்) மசோதா, 2016 என்ற கேரள மாநிலத்திற்கான பெயர் மாற்றம் தொடர்பான மசோதா நிறைவேறியது. இதேபோன்று, தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக (திருத்த) மசோதா, 2026 நேற்று அவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை ஒன்றிய இணை அமைச்சர் மொஹல் முரளிதர் தாக்கல் செய்து பேசினார். இதன்பின்னர் அது பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. ஆதரிப்போர் கையை உயர்த்துக என அவைக்கு தலைமை வகித்த கிருஷ்ண பிரசாத் தென்னட்டி கூறினார். இதன்படி, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.
