சென்னை, ஆக. 12- தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள்: இடி, மின்னல் மற்றும் மணிக்கு பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. இதர மாவட்டங்கள்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுவை & காரைக்கால்: தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளுடன் சேர்த்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
